சல்மான் கானுக்கும், லூலியாவுக்கும் கல்யாணமா???

சல்மானின் காதலி என்று சொல்லப்படும் நடிகை லூலியா ரோமானியாவை சேர்ந்தவர். அவரது நாட்டில் லூலியாவுக்கும், சல்மானுக்கு திருமணம் நடந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த செய்தி தலைப்பில் டோஆம்னா கான் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

டோஆம்னா கான் என்றால் ராயல் மிஸஸ் கான் என்று அர்த்தம். சல்மான் கான் திருமணத்தை பற்றி பேச்சே எடுக்காத போதிலும் இப்படி செய்தி வெளியிட்டுள்ளது ரோமானிய ஊடகம். சல்மான் கான் இந்த ஆண்டு இறுதியில் லூலியாவை திருமணம் செய்து கொள்வார் என்று பாலிவுட்டில் பேசுகிறார்கள்.

முன்னதாக நடிகைகள் சங்கீதா பிஜ்லானி, சோமி அலி, ஐஸ்வர்யா ராய், கத்ரீனா கைஃப் ஆகியோர் சல்மான் கானின் காதலிகளாக இருந்தனர். டெய்சி ஷா, லாரா தத்தா, ஜரீன் கான் பெயர்களும் சல்மான் கான் பெயருடன் சேர்ந்து அடிபட்டது குறிப்பிடதக்கது