கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

Arvind Kejriwal, Arvind Kejriwal Wife, Delhi News, Arvind Kejriwal Family, Arvind Kejriwal Mobile Number, Aap Party News, Arvind Kejriwal Education, Arvind Kejriwal Latest News, Kejriwal Twitter, Breaking News, India Time News, Indiatimenews.Com, India News, World News
Delhi Chief Minister Arvind Kejriwal
டெல்லி முதல்–மந்திரி கெஜ்ரிவாலுக்கு இன்று 48–வது பிறந்த தினம் ஆகும். இதையொட்டி பிரதமர் மோடி அவருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதில், ‘‘டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட காலம் வாழ பிரார்த்திக்கிறேன்’’ என்று கூறப்பட்டு இருந்தது.

பிரதமரின் வாழ்த்துக்கு கெஜ்ரிவால் உடனடியாக டுவிட்டர் பதிவில் நன்றி தெரிவித்தார். அதில் உங்களுடைய வாழ்த்துக்கு மிக்க நன்றி எனக் கூறப்பட்டு இருந்தது.

டெல்லி அரசை செயல்படவிடாமல் சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார் என்று சமீப காலமாக கெஜ்ரிவால் குற்றம்சாட்டி வரும் நிலையில் அவருக்கு மோடி வாழ்த்து தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. இதேபோல், திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்குவங்காள முதல்–மந்திரியுமான மம்தா பானர்ஜியும் கெஜ்ரிவாலுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.