இஸ்ரோ, ISRO, ISRO Recruitment 2015, ISRO Entrance Exam, Indian Space Research Organisation, ISRO Scientist Recruitment 2016, ISRO Wiki, ISRO Syllabus, ISRO Bangalore, ISRO Result, ISRO Admit Card

இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) விரைவில் தகவல் மையம் ஒன்றை ஐதராபாத்தில் அமைக்கவுள்ளதாக அதன் தலைவர் கிரண்குமார் அறிவித்தார்.

தெலுங்கானா மாநிலத்தில் தகவல் மையம் இஸ்ரோ அமைப்பது இதுவே முதல் முறை ஆகும். இம்மையத்தினால் கல்வியாளர்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள் ஆகியோர் பயன்பெறுவர். குறிப்பாக புதிதாகத் தொழில் துவங்க விரும்பும் இளம் தொழில்முனைவோர் நல்ல அறிவார்ந்த யோசனைகளை செயல் அளவில் மாற்றி சிறந்த பொருட்களை உருவாக்கலாம் என்று கூறினார் கிரண் குமார்.

தற்போது இஸ்ரோ தனது செயற்கைக்கோள்களிலிருந்து அனுப்பும் தகவல்களை பல்வேறு ஊர்களிலுள்ள மையங்களில் சேமித்து வைத்துள்ளது. இதனால் இத்தகவல்களை பயன்படுத்துவோர் சிரமத்திற்கு ஆளாகின்றனர். அனைத்துத் தகவல்களும் இம்மையம் திறக்கப்பட்டப் பிறகு ஒரே இடத்தில் கிடைக்கும். இவ்வாறு கிரண்குமார் கூறினார்.