OPS, o Panneerselvam, OPS

ஜெயலலிதாவின் ஆன்மா இன்னும் உயிரோடுதான் இருக்கிறது. அந்த ஆன்மா, நாட்டையும் நாட்டு மக்களையும் உறுதியாக காப்பாற்றி நல்வழிப்படுத்தும். ஜெயலலிதாவின் நல்லாட்சிதான் இப்போதும் நடக்கிறது. தொடர்ந்து, அந்த நல்லாட்சி நடக்கும். ஜெயலலிதாவின் கொள்கைகளை கோட்பாடுகளை அவரது வழியில் செயல்படும் இந்த அரசு உறுதியாக செயல்படுத்தும். அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன், இப்போதைய நல்லாட்சி தொடரும்.

தமிழகத்தில் அமைதியை நிலைநாட்டுவது நமது கடமை. இருக்கும் சூழலை பொறுமையுடன் பார்த்து, ஆட்சியை தொடர எவ்வித இடையூறும் இல்லாமல் சட்டம் ஒழுங்கை காப்பாற்றும் வகையில் நம் செயல்பாடு இருக்க வேண்டும்; அமைதி காப்போம். உறுதியாக நம்முடைய தலைமையில் ஆட்சி தொடரும்.

மாற்றுக்கட்சி, எதிர்க்கட்சி என யாருடைய ஆதரவும் இல்லாமல், முழுக்க முழுக்க அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என்பதற்காக 2-வது முறை அதிமுகவை மக்கள் ஆட்சியில் அமர்த்தினர்.

அதன்பின் நடந்த நிகழ்வுகள் உங்களுக்கு நன்றாக தெரியும். ஜெயலலிதாவின் ஆன்மா உயிருடன் இருந்து நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறது என்பது, சற்றுமுன் வந்த தீர்ப்பு மூலம் உறுதியாகியுள்ளது.