காவிரி பிரச்சினையை கர்நாடகா சட்டப்படி சந்திக்கும்: சித்தராமையா

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி, கர்நாடக அரசு தமிழகத்திற்கு உரிய நீரை விடுவிக்க முன் வராத நிலையில், தமிழ் நாட்டிற்கு உரிய பங்கு நீரை பெற்றிட உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனு ஒன்றினை, விரைவில் தாக்கல் செய்ய முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுபற்றி பெங்களூரில் செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடகா முதல்வர் சித்தராமையா ‘காவிரி பிரச்சினையை கர்நாடகா அரசு சட்டப்படி சந்திக்கும்.

கர்நாடகாவில் தற்போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் தமிழகம் விவசாயத்திற்கு காவிரி நீரைக் கேட்பது வருத்தமளிக்கிறது’ என கருத்துத் தெரிவித்திருக்கிறார்.

வழக்கை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழ்நாடு, கர்நாடகா இரண்டு மாநிலங்களும் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.