2012-ஆம் ஆண்டு முதல் நான் சசிகலாவிடம் பேசியதில்லை : ஓபிஸ்

V. K. Sasikala, Sasikala, Jayalalithaa, Sasikala Age, Sasikala Cm, Sasikala Tamil Nadu, Sasikala Vk, Vk Sasikala, Indiatimenews

2012 முதல் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை நான் சசிகலாவிடா பேசியதில்லை என்று முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறும்போது, “2012 முதல் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை நான் சசிகலாவிடா பேசியதில்லை .ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, நீங்கள் தான் முதலமைச்சராக இருக்க வேண்டும் என்று அனைவரும் கூறினார்கள்.

யாருடன் தொடர்பில் இருக்க வேண்டும் யாருடன் தொடர்பில் இருக்க கூடாது என ஜெயலலிதா எங்களுக்கு சுட்டி காட்டி உள்ளார்.

ஜெயலலிதா சொன்ன வேலையை மட்டுமே நான் செய்தேன். மற்றவை குறித்து நான் சிந்தித்தது கூட இல்லை. முதல்-அமைச்சர் பதவிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டார்கள். அவர்கள் என்ன அசிங்க படுத்தியதாக நினைக்கவில்லை. நான் வகித்த முதல்வர் பதவிக்கு அவமானம் நேர்ந்ததாக கருதுகிறேன்.” என்று அவர் தெரிவித்தார்.