தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணிநேரத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

தமிழகத்தில் காற்றின் தீவிரத்தால் மேலடுக்கில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக ஒரிரு இடங்களில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் வெப்ப சலனம் காரணமாக கோவில் பட்டியில் 8 செ.மீட்டரும், தொழுதூரில் 7 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

இந்நிலையில், சென்னையை பொறுத்தவரை வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படும் என்றும், இரவு நேரங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது