Tamil Nadu Assembly, Tamil Nadu Assembly News Today, Tamil Nadu Legislative Assembly Election 2016, Tamil Nadu Assembly Seats, Tamil Nadu Assembly Session 2016, Tamil Nadu Legislative Assembly Rule 110, Tamil Nadu Legislative Council, Legislative Assembly Meaning In Tamil, Tamil Nadu Legislative Assembly Election 2011

தமிழகத்தின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகன ராவ் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ராம மோகன ராவ் வீடு உட்பட 15 இடங்களில் வருமான வரித்துறையினர் நேற்று சோதனை நடத்தியதைத் தொடர்ந்து அவர் தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

தபால் மூலம் இடை நீக்க உத்தரவை தமிழக அரசு ராம மோகன ராவுக்கு அனுப்பியது. அதனை, ராம மோகன ராவின் உதவியாளர் பெற்றுக் கொண்டார்.

தமிழக தலைமைச் செயலாளர் பதவியில் இருந்து ராம மோகன ராவ் நீக்கப்பட்டதை அடுத்து, அவரது காரில் இருந்து சைரன் விளக்கு உடனடியாக நீக்கப்பட்டுள்ளது.