இன்று, மும்பை தாக்குதல் 8 ம் ஆண்டு நினைவு தினம்

2008 Mumbai Attack, Mumbai Attack 2008 Video, Mumbai Attack Video, Mumbai Attack 1993, 2006 Mumbai Train Bombings, 26/11 Mumbai Attack Story In Hindi, Attacks Of 26/11 Full Movie, Attack Of 26/11 Full Movie Download, 26/11 Attack Story, Indiatimenews, Indiatimenews.Com, Tamil Cinema News, Entertainment, India News, World News, Sports News, Video, And Photosமும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நடந்து 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் பலியான போலீசாருக்கு மாநில கவர்னர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2008 ம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி கடல் வழியாக ஊடுருவிய பாகிஸ்தானை சேர்ந்த 10 பயங்கரவாதிகள் மும்பையில் பல இடங்களில் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில், 18 போலீசார் உட்பட 166 பேர் பலியானார்கள். பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீசார் ஹேமந்த் கர்கரே, ராணுவ உயர் அதிகாரி சந்தீப் உன்னிகிருஷ்ணன், மும்பை கூடுதல் போலீஸ் கமிஷனர் அசோக் காம்தே ஆகியோரும் இந்த சம்பவத்தில் பலியானார்கள்.

பயங்கரவாதிகளின் இந்த தாக்குதல் நவம்பர் 29ம் தேதி வரை நடந்தது. சத்ரபதி சிவாஜி டெர்மினல், தி ஒபராய் டிரிடென்ட், தாஜ்ஓட்டல், லியோபோல்ட் கபே, கமா மருத்துவமனை, தி நாரிமன் ஹவுஸ் கம்யூனிட்டு சென்டர் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடந்தது. இந்த தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் கைது செய்யப்பட்டு, பின்னர் 2012ம் வருடம்ந வம்பர் 21ம் தேதி தூக்கில் போடப்பட்டான்.

இந்த தாக்குதல் நடந்ததன் 8 ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. மகாராஷ்டிரா கவர்னர், முதல்வர் பட்நாவீஸ், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஜூலியோ ரிபேரியோ, மூத்த உயர் அதிகாரிகள் மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். மகாராஷ்டிரா போலீஸ் டிஜிபி மற்றும் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவல் பணி காரணமாக வெளியூர் சென்றுள்ளதால், அஞ்சலி நிகழ்ச்சியில் இருவரும் கலந்து கொள்ளவில்லை.