Thambidurai, Thambidurai Caste, Thambidurai Daughter Marriage, Thambidurai Family, Thambidurai History, Thambidurai Mp Caste, Thambidurai Engineering College, Thambidurai Profile, Thambidurai Mp Bio Data
Lok Sabha Deputy Speaker and All India Anna Dravida Munnetra Kazhagam (AIADMK) leader Thambidurai

சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா மற்றும் இருவருக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என மக்களவை துணை சபாநாயகரான தம்பிதுரை கூறியுள்ளார். சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோருக்கான சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து மூவரும் இன்று மாலைக்குள் பெங்களூரு விசாரணை நீதிமன்றத்தில் சரணடைய உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. மூவருக்கும் 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

அதிமுக புதிய சட்டமன்ற கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுகவிற்கு ஓ.பன்னீர்செல்வம் துரோகம் இழைத்துவிட்டதாக குறிப்பிட்டார். பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு சசிகலா தரப்புக்கு தான் உள்ளது என்ற அவர், விரைவில் ஆளுநர் தங்களை ஆட்சியமைக்க அழைப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.