பத்ரிநாத், கேதார்நாத், உத்தரகாண்ட், Badrinath, Badrinath Movie, Badrinath Temple History, Badrinath Songs, Badrinath Photos, Badrinath Temple History In Hindi, Badrinath Cricketer, Badrinath God, Badrinath Yatra
படம்: Airnewsalerts

உத்தரகாண்ட்: பத்ரிநாத் செல்லும் பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. உத்தரகாண்ட் மாநிலம் விஷ்ணு பிரயாக் அருகே பத்ரிநாத் செல்லும் மலைப்பாதையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதால் சுமார் 11 ஆயிரம் சுற்றுலா பயணிகள் புனித தலமான பத்ரிநாத் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

மே மாத தொடக்கத்தில் பத்ரிநாத் மலைப்பாதை பக்தர்களுக்காக திறந்துவிடப்பட்டது. இன்று ஏற்பட்ட நிலச்சரிவால் பாறைகள் உருண்டு பாதை முழுமையாக மறிக்கப்பட்டுள்ளது. நாளை சனிக்கிழமை இந்தப் பாதை சரி செய்யப்படும் என்று எல்லைப்புற சாலை நிறுவனம் தெரிவித்துள்ளது.

பாதையின் நடுவில் சிக்கிக்கொண்ட 11 ஆயிரம் பயணிகளுக்கான உணவு மற்றும் தங்கும் வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்யும்