Somnath Mhatre

நல்ல பாம்பு ஒன்றிற்கு முத்தமிட முயன்ற பாம்புபிடி வீரர், பாம்புக் கடித்தத்தால் பரிதாபமாக உயிரிழந்தார்.

நவி மும்பையின் பெலபூர் பகுதியை சேர்ந்த சோம்நாத் மாத்ரே (21), தான் பிடித்த நல்ல பாம்பு ஒன்றிற்கு முத்தமிட முயற்சித்தபோது, எதிர்ப்பாராத விதமாக பாம்புக் கட்டித்ததில் உயிரிழந்தார். சோம்பாத் நூற்றுக்கும் மேற்பட்ட ஆபத்தான பாம்புகளை பிடித்துள்ளார்.

கடந்த பிப்.2ஆம் தேதி பாம்புக் கடிப்பட்ட சோம்நாத் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இளம் வயதில் சோம்நாத்துக்கு இதுபோன்ற ஒரு சோக முடிவு நேர்ந்துவிட்டதாகவும், தானே பகுதிகளில் இதுபோன்ற ஆபத்தான ஸ்டான்ட்களை தடை செய்ய வேண்டும் என்றும் விலங்குகள் நல வாரியத்தைச் சேர்ந்த பவன் ஷர்மா என்பவர் கூறியுள்ளார்.

இது குறித்து மற்றொரு பாம்புப்பிடி வீரர் கூறுகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னதாக வனத்துறை அதிகாரிகள் பாம்பிடிப்பவர்களுக்கு அடையாள அட்டை ஒன்றை வழங்கி வந்தனர். ஆனால் தற்போது அது நிறுத்தப்படுள்ளதாக கூறினார்.

மேலும், பாம்புப் பிடிப்பவர்கள் பாம்புக்கு முத்தமிடுவது, தலையை தடவிக் கொடுப்பது, கழுத்தில் சுற்றி விளையாடுவது போன்ற செயல்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும். குறிப்பாக இளைஞர்கள் பாம்பை மிகவும் கவனமாக கையாள வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.