இஸ்ரோ, ISRO, ISRO Recruitment 2015, ISRO Entrance Exam, Indian Space Research Organisation, ISRO Scientist Recruitment 2016, ISRO Wiki, ISRO Syllabus, ISRO Bangalore, ISRO Result, ISRO Admit Card

இந்தியாவில் அதிகவேக இன்டர்நெட் சேவையை அளிப்பதற்காக 3 தொலைத் தொடர்பு செயற்கைகோள். ஜி சாட் 19, ஜி சாட் 11, ஜி சாட் 20 ஆகிய 3 செயற்கைகோள்களையும் அடுத்த 18 மாதங்களில் இஸ்ரோ விண்ணில் ஏவ உள்ளது. இந்த செயற்கைகோள்கள் செலுத்தப்படுவதன் மூலம் நாம் அன்றாடம் பயன்படுத்தும் டிவி, ஸ்மார்ட்போன்கள் ஆகியவற்றின் செயல்பாட்டில் புதிய மறுமலர்ச்சி ஏற்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஸ்மார்ட் சிட்டிகளின் எதிர்கால தொலைத்தொடர்பு சேவைக்கும் இந்த செயற்கைகோள்கள் பயன்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

104 செயற்கைக் கோள்களுடன் விண்ணில் சீறி பாய்ந்தது: பிஎஸ்எல்வி – சி37

ஜூன் மாதத்தில் ஜிசாட் 19 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட உள்ளது. இது இன்டர்நெட் மூலம் தொலைத்தொடர் தொழில்நுட்பத்தை மேலும் எளிதாக்குவதுடன், இன்டர்நெட் மூலம் வயர் இல்லாமல் இயங்கும் தொழில்நுட்பம் கொண்ட டிவி.,க்களையும் பயன்படுத்த வழிவகை செய்யும். இந்த இன்டர்நெட் சேவைகள் வளர்ந்த நாடுகளை விட பல மடங்கு அதிவேகம், குறைந்த விலை, கையாள எளிமையான முறையில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

ஜிசாட் 11 செயற்கைகோள் அடுத்த ஆண்டு ஜனவரியிலும், ஜிசாட் 20 அடுத்த ஆண்டு இறுதியிலும் விண்ணில் செலுத்தபட உள்ளது. நாடு முழுவதும் விநாடிக்கு 70 ஜிகாபைட் என்ற வேகத்தில் டேடா வழங்க இந்த செயற்கைகோள்களை பயன்படுத்துவதே எங்கள் நோக்கம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.