5,500 ஊழியர்களை ஆட்குறைப்பு: சிஸ்கோ அறிவிப்பு

சிஸ்கோ சிஸ்டம்ஸ் உலகளவில் அந்த நிறுவனத்தில் பணி செய்துவரும் ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைக்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளது.

கணினி வன்பொருள்கள் தயாரிப்பிலிருந்து மென்பொருள் தயாரிப்புக்கு அதன் கவனம் திரும்புவதே இதற்கு காரணம்.

சுமார் 5,500 ஊழியர்கள் ஆட்குறைப்பு செய்யப்பட உள்ளதாகவும், இந்த நடைமுறை உடனடியாக தொடங்கப்பட உள்ளதாகவும் அந்நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்துள்ளது.

உலகளவில் அந்த நிறுவனம் 70 ஆயிரம் பேரை பணி அமர்த்தியுள்ளது.

சிஸ்கோ நிறுவனமானது கணினி சுவிட்ச்கள் மற்றும் ரூட்டர்கள் உள்ளிட்ட கருவிகளை பாரம்பரியமாக செய்து வருகிறது.

ஆனால், தற்போது வேகமாக வளர்ச்சி கண்டு வரும் பாதுகாப்பு மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் தொழில்நுட்பம் மீது கவனம் செலுத்த அந்நிறுவனம் விரும்புகிறது.