மெக்ஸிகோவில் பட்டாசு கிடங்கில் திடீர் தீ விபத்து 14 பேர் பலி

மெக்சிகோ நாட்டில் மத்திய பியூப்லா என்ற மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பட்டாசு கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த பட்டாசு கிடங்கில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 14 பேர் பலியாகி உள்ளனர். 22 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

தேவைப்பட்டால் மீண்டும் சர்ஜிக்கல் தாக்குதல்: ராஜ்நாத் சிங்

தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒரு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த விபத்து குறித்து பியூப்லா மாகாண கவர்னர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.