நடிகை ரம்யா மீது தேசத்துரோக வழக்கு பதிவு

காங்கிரஸ் முன்னாள் எம்.பி.யும், நடிகையுமான குத்து ரம்யா சமீபத்திய பேட்டி ஒன்றில், பாகிஸ்தானில் வாழும் மக்கள் நம்மை போலவே சாதாரணமாக வாழ்வதாகவும், இந்தியாவில் இருந்து சென்ற எங்களுடன் அவர்கள் மிகுந்த நட்புடன் பழகியதாகவும் கூறினார். மேலும், பாகிஸ்தானுக்கு செல்வது நரகத்திற்கு செல்வதற்கு ஒப்பானது என மத்திய மந்திரி மனோகர் பாரிக்கர் கூறியதை மறுத்து, அந்த நாடு நல்ல நாடகவே இருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார்.

நடிகை ரம்யா பாகிஸ்தானை நல்ல நாடு என்று கூறிய கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்துள்ளது. அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக பா.ஜனதா கட்சி, விஷ்வ இந்து பரி‌ஷத் மற்றும் இந்து அமைப்பினர் பெங்களூரு, மைசூர், மண்டியா ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

இதற்கிடையே பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய நடிகை ரம்யா மீது தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.