Vivegam, Vivegam Release Date, Vivegam Songs, Vivegam Trailer, Vivegam Movie, Vivegam Teaser, Vivegam First Look, Vivegam Ajith, Vivegam Twitter, Tamil News, Tamil Nadu News, Chennai News, India News, News In Tamil, Cinema News

தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் `விவேகம்’ படத்தின் டீசரால், சமூக வலைதளங்களில் நேற்று நள்ளிரவு ஆரம்பித்த கிடுகிடுப்பு இன்னமும் அடங்கவில்லை. எங்கு சென்றாலும் ‘விவேகம்’ என நகரின் சூடான தலைப்பாக மக்களால் பேசப்பட்டு வருகிறது. டீசரைப் பார்த்தவர்கள் அதை திரும்ப திரும்ப பலமுறை விரும்பி பார்க்கும் அளவுக்கு தல புயல் கடுமையாக வீசியுள்ளது என்று கூட சொல்லலாம்.

அஜித் #விவேகம் திரைப்பட டீசர்

நேற்று நள்ளிரவு வெளியாகிய இந்த புயல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. `விவேகம்’ டீசர் வெளியாகி தற்போது வரை 50 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதில் யூடியூப்பில் மட்டும் 38 லட்சத்திற்கும் மேற்பட்டோர் `விவேகம்’ டீசரை பார்த்து ரசித்திருக்கின்றனர்.

பொதுவாக வெளியிடப்படும் டீசர்களை 12  மணிநேரத்தில் எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள் என்பதை கணக்கிட அளவீடு ஏதும் இல்லை. இந்நிலையில், `விவேகம்’ 12 மணிநேரத்திற்குள் மொத்தமாக 50 லட்சம் பார்வையாளர்களை பெற்றுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது. தென்னிந்தியாவில் வெளியான படங்களில் சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான `கபாலி’ படத்தின் டீசர் 24 மணிநேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களை பெற்றிருந்தது. அதனைத்தொடர்ந்து இரண்டாவது இடத்தில் `கட்டமராயுடு’ 57 மணிநேரத்தில் 50 லட்சமும், மூன்றாவது இடத்தில் `பைரவா’ 76 மணிநேரத்தில் 50 லட்சம் பார்வையாளர்களையும் பெற்றிருந்தது. இந்நிலையில், 12 மணிநேரத்திலேயே 50 லட்சம் பார்வையாளர்களை பெற்று `விவேகம்’ புதிய சாதனை படைத்திருக்கிறது.

Vivegam, Vivegam Release Date, Vivegam Songs, Vivegam Trailer, Vivegam Movie, Vivegam Teaser, Vivegam First Look, Vivegam Ajith, Vivegam Twitter, Tamil News, Tamil Nadu News, Chennai News, India News, News In Tamil, Cinema News
புதிய சாதனையை படைத்த அஜித் `விவேகம்’ டீசர்

சிவா இயக்கத்தில் வெளியாக உள்ள `விவேகம்’ படத்தில் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கின்றனர். அனிருத் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். ரூபன் எடிட்டிங் பணிகளை மேற்கொண்டிருக்கிறார்.