சார்க் மாநாட்டை புறக்கணிக்கிறார் அருண் ஜெட்லி?

Arun Jaitley, Sangeeta Jaitley, Arun Jaitley Address, Indiatimenews.Com, Finance Minister, Minister Of Finance, Bjp Leader, India Business News, Business News
Finance minister Arun Jaitley

இஸ்லாமாபாத்தில் வரும் ஆகஸ்டு 25 மற்றும் 26-ந்தேதிகளில் சார்க் கூட்டமைப்பில் உள்ள நாடுகளின் நிதி மந்திரிகளின் கூட்டம் நடைபெற உள்ளது. இதில் தெற்கு ஆசியாவை சேர்ந்த 8 நாடுகளின் நிதி மந்திரிகள் கலந்து கொள்கின்றனர். இந்தியா சார்பில், மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியும் கலந்து கொள்வதாக கூறப்பட்டு வந்தது.

இந்நிலையில், அடுத்த வாரம் நடைபெறவுள்ள சார்க் நிதி மந்திரிகள் மாநாட்டை மத்திய மந்திரி அருண் ஜெட்லி புறக்கணிக்க போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அரசு தரப்பில் இருந்து இந்த தகவல் வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இருப்பினும் பிரதமர் நரேந்திர மோடி தான் அருண் ஜெட்லியின் பயணம் குறித்து இறுதி முடிவு எடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சார்க் நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கடந்த ஆகஸ்ட் 4-ம் தேதி பாகிஸ்தான் சென்றிருந்தார். அப்போது ராஜ்நாத் சிங்கை பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய விதத்தில் மத்திய அரசுக்கு திருப்தி இல்லை என்று கூறப்படுகிறது.

இதனிடையே, பாகிஸ்தான் வரும் அருண் ஜெட்லிக்கு எவ்வித பதற்றமும் இல்லாமல் சிறப்பான வரவேற்பை அளிக்க உள்ளதாக அந்நாட்டு நிதி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.