பாகுபலி, Baahubali 2, Baahubali 2 Movie, Baahubali 2 songs, Baahubali 2 trailer, Baahubali 2 movie, Baahubali movie

ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 28-ம் தேதி வெளியான பாகுபலி 2 திரைப்படம் வெளியான 21 நாட்களில் ரூ. 1502 கோடி வசூல் செய்து சாதனையை நிகழ்த்தி உள்ளது

பகுபலி 2 நடிகர் பிரபாஸ், ராணா, சத்யராஜ், நாசர், அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்துள்ளார். பகுபலி 2 மொழிகளில் உலகம் முழுவதும் 9 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்த படம் வசூலில் எந்த இந்திய படமும் செய்யாத சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.

வெளிநாட்டிலும் வசூலை வாரி குவித்த ‘பாகுபலி 2’

இதன் முதல் பகுதியான பாகுபலி மொத்தமாக ரூ.650 கோடி வசூலித்து இருந்தது. அந்த வசூலில் இரட்டிபாக ஈட்டி உள்ளது பாகுபலி-2. உலக அளவில் இதுவரை அவதார், டைட்டானிக், ஹாரிபாட்டர், லார்ட் ஆப் ரிங்க்ஸ் உள்ளிட்ட சில ஹாலிவுட் படங்கள் மட்டுமே ரூ.1,000 கோடி வசூலித்து இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

டப்பிங் ரெடியாகும் பகுபலி 2

பாகுபலி-2 படத்தை சீனா மற்றும் ஜப்பான் மொழிகளில் ‘டப்பிங்’ செய்து வெளியிடவும் ஏற்பாடுகள் நடக்கின்றன. ஜப்பானில் தமிழ் படங்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. பாகுபலி திரைப்படம் தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வெற்றிகரமாக ஓடுகிறது, மேலும் சாதனைகளை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.