பாபர் மசூதி வழக்கு: அத்வானி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

Babri Masjid, Babri Masjid History In Hindi, Babri Masjid Photos, Babri Masjid Attack Video, Babri Masjid Demolition Video, Babri Masjid Bhojpuri Movie, Ayodhya Ram Mandir And Babri Masjid, Babri Masjid Today, Babri Masjid History In Tamil

டெல்லி:  பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வருகிற மே 30-ம், 2017 தேதி பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி, ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங், நேரில் ஆஜராகுமாறு சிறப்பு நீதிமன்றம் சம்மன் அனுப்பயுள்ளது.

ஏப்ரல் 19-ம் தேதி இந்த வழக்கில் உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம் ஒரு மாதத்திற்குள் பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணையை தொடங்கி இரண்டு ஆண்டுக்குள் வழக்கை முடிக்குமாறு சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து மே 20-ம் தேதி முதல் தினந்தோறும் விசாரணையை சிறப்பு நீதிமன்றம் நடத்தி வருகிறது.

இந்த வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமா பாரதி, ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங் ஆகியோர் மீதான விசாரணையும் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் வழக்கு விசாரணையில் ஆஜராகுமாறு கல்யாண் சிங் அல்லாத மற்றவர்களுக்கு நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.