Venkaiah Naidu, Venkaiah Naidu Address, Usha Venkaiah Naidu, Harshvardhan Naidu, Venkaiah Naidu Son, Venkaiah Naidu Caste, Deepa Venkat Venkaiah Naidu, Venkaiah Naidu Family Photos, Venkaiah Naidu Daughter, Breaking News, India Time News, Indiatimenews.Com, India News, World News

கேரளாவில் படப்பிடிப்பு முடித்து திரும்பிய நடிகை பாவனா கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டார். இந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் ‘சித்திரம் பேசுதடி’ படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை பாவனா. தொடர்ந்து முன்னணி நடிகர்களோடு பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 17-ம் தேதி படப்பிடிப்பு முடிந்து கொச்சிக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தார்.

அப்போது பின்தொடர்ந்து வந்த ஒரு கும்பல் அவரது காரை வழிமறித்து அவரை காரில் வைத்து இரண்டு மணி நேரம் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது. இது திரையுலகில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் கமல்ஹாசன் மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்

இந்த சம்பவத்திற்கு மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ள அவர், “இந்த கடத்தல் சம்பவத்திற்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன். இதுபோன்ற குற்றங்களை தடுக்க முன்னுதாரணமாக தண்டனை வழங்கப்பட வேண்டும்“ என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்கள் மீது பாலியல் ரீதியாக தாக்குதல் நடத்துவோரை விரைந்து விசாரித்து தண்டனை வழங்கப்படும் வகையில் புதிய மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.