2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வரும்

SAARC summit, Rajnath Singh, Rajnath Singh Address, Savitri Singh, Rajnath, Rajnath Singh Family Photo, Rajnath Singh Son, Pankaj Singh, Rajnath Singh Bjp, Rajnath Singh Pakistan, Breaking News, India Time News, Indiatimenews.Com, India News, World News

டெல்லி: 2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை  முடிவுக்கு கொண்டு வரப்படும் என்று ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

புதிய இந்தியா

டெல்லியில் நடைபெற்ற புதிய இந்தியா நிகழ்ச்சியில் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பேசியதாவது: பயங்கரவாதம், நக்சலிசம், கஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன.

காஷ்மீர் பிரச்சினைக்கு தீர்வு

இந்த பிரச்சினைகள் குறித்து அதிகம் சொல்ல வேண்டியது இல்லை. ஆனால், உங்களுக்கு நான் ஒரு  உறுதி அளிக்கிறேன். வரும் 2022-க்குள் இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். புதிய இந்தியாவை உருவாக்குவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். எனவே, 2022 ஆம் ஆண்டுக்குள் இந்த பிரச்சினைகள் அனைத்துக்கும் தீர்வு காணப்படும்” இவ்வாறு ராஜ்நாத்சிங் தெரிவித்தார்.