Subramanian Swamy, Dr Subramanian Swamy Daughter, Subramanian Swamy Website, Subramanian Swamy Speech, Subramanian Swamy Books, Breaking News, India News, World News, Indiatimenews.Com, Subramanian Swamy Youtube, Subramanian Swamy Lawyer, Gitanjali Swamy

டில்லி: தனியார் நிறுவனத்திடம் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கிய டில்லி முதல்வர் கெஜ்ரிவால் மீது சி.பி.ஐ. விசாரணை நடத்தப்பட வேண்டும் என பா.ஜ. மூத்த தலைவர் சுப்ரமணியன்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

கெஜ்ரிவால் கெஜ்ரிவாலுக்கு பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டி: டில்லி முன்னாள் கவர்னர் நஜீப் ஜங், கெஜ்ரிவாலுடன் மறைமுகமாக இணைந்து செயல்பட்டார். அவர்கள் இடையிலான மோதல் ஒரு நாடகம். கெஜ்ரிவாலுக்கு எதிராக விசாரணை நடத்த நான் பல முறை அனுமதி கேட்டும் ஜங் தரவில்லை.

தனியார் நிறுவனத்திடம் கெஜ்ரிவால், ரூ.2 கோடி லஞ்சம் வாங்கினார். நான்கு தவணைகளில் ரூ.50 லட்சம் வீதம் லஞ்சம் வாங்கினார். இதற்காக அந்நிறுவனம் வாட் வரி விவகாரத்தை சாதகமாக செய்து கொடுத்தார். கெஜ்ரிவாலுக்கு எதிராக வழக்கு தொடர கவர்னர் அனுமதி தரவிட்டால், அவர் மீது சுப்ரீம் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்வேன். எனது குற்றச்சாட்டை நிருபிக்க ஆதாரம். உள்ளது. இந்த வழக்கை சி.பி.ஐ., எடுத்து விசாரிக்க போதுமான தகுதியுள்ளது. இவ்வாறு சுப்ரமணியன்சாமி கூறியுள்ளார்.