இந்திய சட்டங்களில் மாற்றம்: பிரதமர் மோடி

Narendra Modi, Narendra Modi Video, Narendra Modi In Hindi, Narendra Modi Speech, Narendra Modi Height, Narendra Modi Birthday, Narendra Modi App, Narendra Modi Email Id, Narendra Modi BJP, Breaking News, India Time News, Indiatimenews.Com, India News, World News
The Prime Minister, Shri Narendra Modi addressing the Nation on the occasion of 68th Independence Day from the ramparts of Red Fort, in Delhi on August 15, 2014.

புதுடில்லி: எதிர்காலத்திற்கான சவால்களை சந்திக்க வேண்டுமானால், இந்தியா தொடர்ந்து வேகமான மாற்றங்களை எதிர்கொண்டாக வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

டில்லியில் நிடி ஆயோக் அமைப்பில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசுகையில், இந்தியாவுக்கு, நிர்வாக முறைகள், சட்டம், தேவையற்ற நடைமுறைகள், தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொண்டு அதற்கேற்றவாறு வேகமாக செயல்படுதல் ஆகியவை தேவைப்படுகிறது. இந்த 21ம் நூற்றாண்டில், 19ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை வைத்து கொண்டு முன்னேறி செல்ல முடியாது மாற்றத்திற்கான சவால்களை இந்தியா எதிர்கொள்ள படிப்படியான வளர்ச்சி தேவையில்லை. வேகமான வளர்ச்சி தான் தேவை.

இந்தியா குறித்து எனது பார்வை, தொடர்ச்சியான மாற்றமாகும். படிப்படியான மாற்றமல்ல. நிர்வாகத்தில் மாற்றம் செய்யாமல், எவ்வித மாற்றமும் செய்ய முடியாது. மனதளவில் மாற்றம் செய்யாமல், நிர்வாகத்தில் மாற்றம் செய்ய முடியாது. கொள்கையில் மாற்றமில்லாமல், மனதளவில் மாற்றம் செய்ய முடியாது எனக்கூறினார்.