1 கோடியே 34 லட்சம் புதிய ரூபாய் நோட்டுக்கள் பறிமுதல்

2000 note, Indian Currency, Indian Currency Exchange Rate, Indian Currency Rate Today, Indian Rupee Symbol, Indian Currency History, Indian Currency Converter, Indian Rupees, 1 Billion In Indian Rupees, Indian Currency Coins

சென்னை விமான நிலையம் அருகே புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை ஒரு கும்பல் காரில் கடத்தி செல்வதாக வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்று காலை விமான நிலையம் அருகே ஜி.எஸ்.டி. சாலையில் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக ஒரு கார் நிற்காமல் வேகமாக சென்றது.

அதிகாரிகள் அந்த காரை விரட்டிச் சென்று துப்பாக்கி முனையில் மடக்கினர். இதையடுத்து அந்த காரை அதிகாரிகள் சோதனையிட்டதில் 1 கோடியே 34 லட்சம் மதிப்பிலான புதிய ரூபாய் நோட்டுக்கள் இருந்தது. அதனை வருவாய் புலனாய்வு பிரிவினர் பறிமுதல் செய்தனர்.

இதுதொடர்பாக காரில் இருந்த ரிஷ்வான், முக்தர், சமிஅகமது உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் புதிய ரூபாய் நோட்டுகள் பற்றி அதிரடியாக விசாரணை நடத்தப்பட்டது.

புதிய ரூபாய் நோட்டுகளை தாம்பரத்தில் உள்ள முக்கிய பிரமுகர் ஒருவரை சந்தித்து கொடுப்பதற்காக 5 பேரும் அதனை காரில் கடத்தி சென்றது தெரிய வந்தது. இந்த ரூபாய் நோட்டுகளை வாங்கி கொண்டு அதற்கு பதிலாக ரூ.2 கோடிக்கு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை தருவதாக அந்த பிரமுகர் கூறி இருந்ததும் தெரிய வந்தது.