டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் ராஜினாமா

The India Time News, Indiatimnews.com, indiatimenews
Delhi Lieutenant Governor Najeeb Jung resigns

டெல்லி மாநில துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை மத்திய அரசுக்கு துணை ஆளுநர் நஜீப் ஜங் அனுப்பிவிட்டார். மீண்டும் ஆசிரியர் பணியை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக நஜீப் ஜங் தகவல் தெரிவித்துள்ளார்.

நஜூப் ஜங் பதவிக்காலம் முழுவதும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுடன் மோதலாகவே இருந்து வருகிறது. டெல்லி அதிகாரிகள் நியமனத்தில் தொடங்கி அனைத்து விவகாரங்களிலும் மோதல் ஏற்பட்டது.

டெல்லி  துணைநிலை ஆளுநரின் அதிகாரத்தை எதிர்த்து வழக்கும் தொடர்ந்து உள்ளார். தொடர் மோதலால் விரக்தி அடைந்து பதவியை நஜீப் ஜங் பதவியை ராஜினாமா செய்தார். பதவிக்காலம் முடிய இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ள நிலையில் நஜீப் ஜங் ராஜினாமா செய்துள்ளார்.