ஜிஎஸ்டி வரி, ஜிஎஸ்டி GST, GST In Hindi, GST Explained, GST Wiki, GST Time, GST Benefits, GST Means, GST India, Goods And Services Tax

ஜிஎஸ்டி முறை நுகர்வோருக்கு சாதகமாக இருக்கும் என்றும், கல்வி மற்றும் சுகாதாரத்திற்கு சேவை வரி விதிப்பிலிருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் நிதியமைச்சர் அருண்ஜேட்லி கூறினார். சரக்கு என்ற வகைப்பாட்டில் தங்கத்தின் மீதான ஜிஎஸ்டி வரி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. ஜிஎஸ்டி கவுன்சில் மீண்டும் ஜூன் 3ஆம் தேதி கூட உள்ளது.

மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லி, சேவைத்துறைகளுக்கு 5 சதவீதம், 12 சதவீதம், 18 சதவீதம், 28 சதவீதம் என நான்கு அடுக்காக ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட உள்ளதை சுட்டிக்காட்டினார்.

போக்குவரத்து சேவைகளுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், அந்த வகையில் ஓலா, உபேர் போன்ற சேவைகளுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். 50 லட்சம் ரூபாய் மற்றும் அதற்கும் குறைவான வருவாய் உள்ள உணவகங்களுக்கு 5 சதவீத வரி விதிக்கப்படும் என்றும், ஏசி வசதியில்லாத உணவகங்களுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஜிஎஸ்டி வரி விகிதங்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டது: அருண் ஜேட்லி

மதுவிநியோகிக்க உரிமம் பெற்றுள்ள ஏசி வசதியுள்ள உணவகங்களுக்கு 18 சதவீதமும், 5 நட்சத்திர விடுதிகளுக்கு 28 சதவீதமும் வரி விதிக்கப்படும் என்றும் அருண்ஜேட்லி கூறினார். தொலைத்தொடர்பு, நிதிச்சேவைகளுக்கு 18 சதவீதமும், ரேஸ் கிளப்புகள், பெட்டிங் நடைபெறும் இடங்கள், திரையரங்குகளுக்கு 28 சதவீதமும் வரி விதிக்கப்படும் என்று அருண்ஜேட்லி தெரிவித்தார்.