பானாஜி தொகுதியில் கோவா முதல்வர் பரீக்கர் போட்டி

Manohar Parrikar, Medha Parrikar, Avdhut Parrikar, Manohar Parrikar Son, Manohar Parrikar Contact Number, Manohar Parrikar Simplicity, Manohar Parrikar CM, Manohar Parrikar Speech, Manohar Parrikar BJP, Breaking News, India Time News, Indiatimenews.Com, India News, World News

கோவாவில் பா.ஜ.வைச் சேர்ந்த மனோகர் பரீக்கர் முதல்வராக உள்ளார். இந்த மாநிலத்தில் கடந்த பிப்ரவரியில் நடந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 13 இடங்களில் பா.ஜ. வெற்றி பெற்றது.

கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ. ஆட்சியை பிடித்தது. முதல்வராக மனோகர் பரீக்கர் பதவியேற்றார். ஆறு மாதங்களுக்குள் அவர் ஏதேனும் ஒரு தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இந்நிலையில் பரீக்கர் போட்டியிட வசதியாக பானாஜி தொகுதி பா.ஜ. எம்.எல்.ஏ. சித்தார்த் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இதையடுத்து இந்த தொகுதியில் நடக்க உள்ள இடைத்தேர்தலில்மனோகர் பரீக்கர் போட்டியிட உள்ளார்.