SAARC summit, Rajnath Singh, Rajnath Singh Address, Savitri Singh, Rajnath, Rajnath Singh Family Photo, Rajnath Singh Son, Pankaj Singh, Rajnath Singh Bjp, Rajnath Singh Pakistan, Breaking News, India Time News, Indiatimenews.Com, India News, World News
தமிழகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் பரபரப்பால் அசாதாரண சூழல் நிலவுகிறது. முதல்வராக யார் பதவி ஏற்கக்கூடும் என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது.  ஓ பன்னீர் செல்வம் தரப்பும் சசிகலா தரப்பும் நேற்று ஆளுநரை சந்தித்தது.
இதையடுத்து, இருவரின் சந்திப்புகள் பற்றியும், தமிழக அரசியல் நிலவரம் பற்றியும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு, ஆளுநர் வித்யாசாகர் ராவ் அறிக்கை அனுப்பினார். அதன்பின்னர், என்ன முடிவு செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு பல்வேறு தரப்பிலும் காணப்படுகிறது.
இந்நிலையில், தமிழக அரசியல் நிலவரம் பற்றி டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ், இறுதி முடிவு செய்வார் எனக் கூறியுள்ளார்.தமிழகத்தின் அரசியலமைப்புத் தலைவர் ஆளுநரே என்பதால், அவரின் முடிவுக்கே இந்த விவகாரம் விடப்பட்டுள்ளதாகவும், ராஜ்நாத் சிங் குறிப்பிட்டுள்ளார்.