ஜிஎஸ்டி வரி, அருண் ஜேட்லி, Arun Jaitley, Sangeeta Jaitley, Arun Jaitley Address, Indiatimenews.Com, Finance Minister, Minister Of Finance, Bjp Leader, India Business News, Business News

மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் ஜிஎஸ்டி கூட்டம் ஸ்ரீநகரில் நடந்தது. இதில் 80 முதல் 90 சதவீத பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு வரி விகிதங்கள் முடிவு செய்யப்பட்டுவிட்டதாகத் தெரிகிறது.

இதில் தினசரி பயன்படுத்தும் பொருட்களுக்கு குறைந்தபட்சம் 5 சதவீத வரி விதிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

ஜிஎஸ்டி-யால் பொருள்களின் விலை உயராது: அருண் ஜேட்லி

முன்னாதாக ஜிஎஸ்டி வரம்புக்குள் தங்கத்துக்கு ஒரு சதவீத வரி விதித்தால் போதுமானது என்னும் கோரிக்கைகள் எழுந்த நிலையில், தங்கம் அடிப்படை தேவையில்லை, அதனால் தங்கத்துக்கு 5 சதவீத வரி விதிக்க வேண்டும் என கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்தார்.

பூஜை பொருள்களுக்கு 18 சதவீதம் என பரிந்துரை செய்யப்பட்டது. ஆனால் உத்தரபிரதேசம் இதற்கு வரி விதிக்க கூடாது என கோரிக்கை வைத்திருக்கிறது. சில மாநிலங்கள் இரு வகையாக சேவை வரி (12 மற்றும் 18%) விதிக்கப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தன.