ஜி.எஸ்.டி.,யால் உள்நாட்டு உற்பத்தி விகிதம் உயரும்: பிரணாப் முகர்ஜி

Pranab Mukherjee, Suvra Mukherjee, Sharmistha Mukherjee, Pranab Mukherjee Daughter, Pranab Mukherjee In Hindi, Pranab Mukherjee Car, Pranab Mukherjee Height, Pranab Mukherjee Twitter, Pranab Mukherjee Family,

ஜி.எஸ்.டி. சட்டம் மூலம் உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதம் மேலும் 2% அதிகரிக்கும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நம்பிக்கை தெரிவித்தார்.

கோல்கட்டாவில் நடந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பேசியதாவது: நம் நாட்டில் உள்ள மனித வளத்தால், உலக அளவில் பொருளாதார மந்த நிலை நிலவி வரும்போதும் இந்தியாவில் உள்நாட்டு வளர்ச்சி விகிதம் உயர்ந்துள்ளது. நாட்டின் அனைத்து துறைகளிலும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதன் மூலம் இப்பொருளாதார வளர்ச்சியின் முழுப் பலனும் நாட்டு மக்களை சென்றடையும். மேலும் நம் தொழிலாளர்களுக்கு முறையான பயிற்சி அளித்து, உற்பத்தித் திறனையும் அதிகரிக்க வேண்டும்.

மத்திய அரசால் தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் “மேக் இன் இந்தியா’, “இந்தியாவில் முதலீடு செய்வோம்’, “எழுச்சிமிகு இந்தியா’ போன்ற திட்டங்கள் உள்நாட்டு வளர்ச்சி விகிதத்தை அதிகரிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டவை. பார்லியில் நிறைவேற்றப்பட்ட ஜி.எஸ்.டி., மசோதா மூலம் இந்தியா ஒரு பொதுச் சந்தையாக மாறும். மேலும் இச்சட்டம் மூலம் உள்நாட்டு மொத்த உற்பத்தி விகிதம் மேலும் 2 சதவீதம் அதிகரிக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.