Pon Radhakrishnan, Pon Radhakrishnan Phone Number, Pon Radhakrishnan Caste, Pon Radhakrishnan News, Pon Radhakrishnan Facebook, Pon Radhakrishnan Community, Pon Radhakrishnan Jayalalitha, Pon Radhakrishnan Family Marriage, Ponniah Ayyappan

பிரதமர் மோடியை சீண்டினால் அதிமுக சுக்குநூறாக உடையும் என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆவேசமாக கூறியுள்ளார். சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் உள்ள எம்.ஜி.ஆர்.நகர் மார்க்கெட்டில் பாஜ சார்பில் பிரமாண்ட பொது கூட்டம் நேற்றிரவு நடைபெற்றது. ஜல்லிக்கட்டை நடத்த வழிவகுத்த பிரதமருக்கு நன்றி தெரிவித்தும், பாஜ அரசின் 3 ஆண்டு கால சாதனைகளை விளக்கியும் இந்த பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் டால்பின் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாஜ மாநில தலைவர் தமிழிசை பேசியதாவது : தமிழ்நாடு மிரண்டு எழுகிறது. காமராஜர், அண்ணா, கருணாநிதி, ஜெயலலிதா போன்றோர் அமர்ந்த முதல்வர் இருக்கையில் யாரெல்லாமோ அமர நினைக்கிறார்கள் என எண்ணும் போது மனம் வேதனை அடைகிறது.

தற்போதைய பிரச்னைக்கு மோடியும், பாஜவும்தான் காரணம் என்று பொய் பிரசாரம் செய்கின்றனர். அதிமுக இரண்டாக உடைய பாஜதான் காரணம் என சசிகலா கூறுகிறார். உண்மைதான். பதுக்கி வைத்த பணத்தை வைத்து கட்சியை நடத்த முடியாமல் தடுத்ததற்கு மோடிதான் காரணம். சட்டமன்ற உறுப்பினர்களை சுதந்திரமாக நடமாட விட்டு பார்க்கட்டும். அவர்கள் யாருக்கு ஓட்டு போடுகிறார்கள் என்று பார்க்கலாம். அதுகுறித்து எல்லாம் எங்களுக்கு கவலை இல்லை.

எங்களுடைய கவலையெல்லாம் தமிழகத்தில் மோடி ஆட்சியை ஏற்படுத்துவதுதான். கூவத்தூருக்கு செல்லும் சசிகலாவின் காரின் பின்சீட்டில் அவருடைய வேலைக்காரி அமர்ந்துள்ளார். அவரை பார்த்தால் அதிமுகவின் எதிர்காலம் ெதரிகிறது. பாஜவின் எதிர்காலம் மக்களிடம் உள்ளது. தமிழகத்தில் மாற்றம் வர வேண்டும். தற்போது உள்ளவர்கள் ஊழல் கரைபடிந்தவர்களாக உள்ளனர். எனவே ஊழலற்ற நிலையான ஆட்சி வர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.