Ravi Shankar Prasad, Ravi Shankar Prasad Contact, Anuradha Prasad, Aditya Shankar Ravi Shankar Prasad, Ravi Shankar Prasad Daughter, Maya Shankar, Ravi Shankar Prasad Twitter, Chandramauli Kumar Prasad, Thakur Prasad, Tamil News, Tamil Nadu News, Chennai News, India News, News In Tamil, Cinema News

மத்தியில் சிதம்பரம் அமைச்சராக இருந்த போது கார்த்தியின் சொத்து அதிகரித்தது எப்படி என மத்திய சட்டத்துறை அமைச்சர்ரவிசங்கர் பிரசாத் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை உள்ளிட்ட சில இடங்களில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மற்றும் அவரது மகன்  கார்த்தி சிதம்பரம் வீட்டில் சோதனை நடத்தியது. இதேபோல் பினாமி சொத்துகளை மாற்றியதாக லாலு மகன்களுக்கு சொந்தமான வீடுகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை: சி.கார்த்தி

இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை. எங்களது குரலை ஒடுக்க முடியாது என சிதம்பரம் மற்றும் லாலு தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், மத்தியில் சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த போது கார்த்தி சொத்து அதிகரித்தது எப்படி என்பது பற்றி விளக்கமளிக்க வேண்டும்.

லாலு தனது சொத்துக்கள் குறித்து இதுவரை விளக்கமளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.