அரசை விமர்சிப்பது எப்படி அவதூறாகும்? – அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

Euthanasia, Compulsory Vote, SC, Supreme Court, Supreme Court India, Supreme Court Cause List, Supreme Court Case Status By Name, Supreme Court Judgement, Supreme Court Display Board, Supreme Court Of India Judges, Supreme Court Recruitment, Supreme Court Of India Chief Justice

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் அவரது மனைவி பிரேமலதா ஆகிய இருவர் மீதான பிடிவாரண்ட் உத்தரவிற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. பொதுக் கூட்டம் ஒன்றில் அவதூறாக பேசியதாக இருவர் மீதும் ஜெயலலிதா அவதூறு வழக்கு தாக்கல் செய்தார்.

4 முறை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டும் வராததால் திருப்பூர் நீதிமன்றம் இருவருக்கும் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கலானது. இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அரசை விமர்சிப்பது எப்படி அவதூறாகும் என வினவியுள்ளது. மேலும் அவதூறு வழக்கை தாக்கல் செய்ய அரசு வழக்கறிஞரை பயன்படுத்துவது ஏன் என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்துள்ள அவதூறு வழக்குகளின் பட்டியலை தமிழக அரசு வரும் 2 வாரங்களுக்குள் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் மீதான விசாரணையை செப்டம்பர் 14-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.