national human rights commission, national human rights commission news, national human rights commission notic, national human rights commission notice issuesd, delhi news, chennai news

டெல்லியிலுள்ள வோர்ட்கார்ஃப்ட் பதிப்பகம் ‘போரட்டத்தின் கலச்சாரங்கள்’ என்ற தலைப்பில் கருந்தரங்க தொடரை இரண்டு நாள் டெல்லி ராம்ஜாஸ் கல்லூரியில் நடத்த ஏற்பாடு செய்திருந்தது.

ராம்ஜாஸ் கல்லூரியில் பிப்ரவரி 22-ம் தேதி நடைபெற்ற கருந்தரங்க நிகழ்வில், கடந்த ஆண்டு தேச விரோத குற்றத்தில் கைது செய்யப்பட்ட ஜவஹர்லால் நேரு பல்கலைகழக ஆய்வு மாணவரும், மாணவ செயற்பாட்டாளருமான உமர் காலித் பேச்சாளராக கலந்துக் கொண்டார்.

டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங் ராஜினாமா

ஆனால் உமர் காலித் கலந்துக் கொண்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏபிவிபி (அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் ) மாணவ அமைப்பினர் போரட்டத்தில் ஈடுபட்டனர். ஏபிவிபி அமைப்பினரின் போராட்டம் காரணமாக கருத்தரங்க நிகழ்வில் உமர் காலித் பங்கேற்பது ரத்து செய்யப்பட்டது.

இதனையடுத்து இடதுசாரி ஆதரவு அனைத்திந்திய மாணவர்கள் கூட்டமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களில் ஒரு பகுதியினர் கல்லூரி நிர்வாகம் ஏபிவிபிக்கு அடிபணிந்ததை எதிர்த்தனர். மாரிஸ் நகர் காவல்நிலையம் நோக்கி ஏபிவிபி மீது நடவடிக்கை கோரி ஊர்வலம் செல்ல முடிவெடுத்தனர்.

ஆனால் இந்த போராட்ட ஊர்வலத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் பிரச்சினை தீவிரமடைந்தது. போலீசார் இவர்கள் மீது தடியடி நடத்தினர்.

இந்நிலையில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் டெல்லி ராம்ஜாஸ் கல்லூரியில் பிப்.22 கலவரம் குறித்து விளக்கம் அளிக்க டெல்லி காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.