நான் சம்பளம் குறைவாக வாங்குவதாகவே உணர்கிறேன்; ரகுராம் ராஜன்

Raghuram Rajan, RBI Raghuram Rajan, RBI Governer, Raghuram Rajan salary, Raghuram Rajan image, Raghuram Rajan speach

பொதுத்துறை வங்கிகளில் உயர் பொறுப்புக்களில் இருப்பவர்களுக்கு குறைவான சம்பளமும், கீழ்மட்ட அளவிலான பணியாளர்களுக்கு அதிக சம்பளமும் வழங்கப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற வங்கிகளுக்கான கருத்தரங்கு ஒன்றில் அவர் பேசுகையில், ‘பொதுத்துறை நிறுவனங்கள் அனைத்திலும் தற்போது இருக்கக்கூடிய பிரச்சனைகளில் ஒன்று கீழ் மட்ட அளவில் அதிக சம்பளமும், உயர்மட்ட அளவில் குறைவான சம்பளமும் வழங்கப்படுவது. எனக்கு கூட சம்பளம் குறைவாக வழங்கப்படுவதாகவே உணர்கிறேன்.

ரிசர்வ் வங்கியில் வழங்கப்படும் சம்பளத்தை பொறுத்தவரை கிளாஸ் 3 பிரிவில் உள்ள பணியாளர்களுக்கு கூட கவர்ச்சிகரமான சம்பளம் வழங்கப்படுகிறது. அதனால்தான், கிளாஸ் 3 பிரிவில் கூட நாம் பல இன்ஜினியர்களையும், எம்.பி.ஏ படித்தவர்களையும் காண்கிறோம்’ என தெரிவித்தார்.

மேலும், பொதுத்துறை வங்கிகளின் மேலாண்மையில் மற்ற ஒழுங்குமுறை ஆணையங்களின் அதிக அளவிலான ஆதிக்கத்தை குறைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

ரிசர்வ் வங்கி அறிக்கையின்படி, ரகுராம் ராஜனின் கடந்த ஜூலை மாத சம்பளம் ரூ.1,98,700 என்பது குறிப்பிடத்தக்கது.