Donald Trump, Donald Trump On Immigration, Donald Trump On Guns, Donald Trump Education, Donald Trump Dead, Donald Trump Daughter, Donald Trump Family, Donald Trump Height, Donald Trump Birthday

அமெரிக்காவின் புதிய அதிபராக டெனால்ட் டிரம்ப் பதவியேற்று ஒரு மாதமான நிலையில், அவர் புளோரிடா மாகாணம் சென்றுள்ளார். அங்குள்ள மெல்பேர்னில் நடந்த பொதுக்கூட்டத்தில், தனது ஆதரவாளர்கள் முன்பாக டிரம்ப் பேசியதாவது:

மே மாதம் பிரதமர் மோடி அமெரிக்கா பயணம்

நம் நாட்டுக்கு ஆயிரமாயிரம் மக்களை அனுமதிக்கிறோம். அவர்களை தணிக்கை செய்ய நம்மிடம் எந்த வழியும் இல்லை. நம் நாட்டின் பாரம்பரியத்தையும், நம்மையும் நேசிக்கும் மக்களை வரவேற்கிறோம். அதே நேரத்தில் தீய எண்ணங்களுடன் வருபவர்களை ஒருபோதும் விரும்ப மாட்டோம்.

அமைதிக்கு பதிலாக நாம் பார்த்ததெல்லாம் முடிவில்லாத போர்களும், தீராத மோதல்களும் மட்டுமே. வெற்றிக்காக நாம் சண்டையிடவில்லை. அரசியல் ரீதியாக சரியான போர்களில்தான் சண்டையிடுகிறோம். ஆனால், நாம் எதையும் ஜெயிக்கவில்லை. இனி நாம் மீண்டும் வெற்றி பெற ஆரம்பிக்க உள்ளோம். நம் பலத்தை கூட்டுவதன் மூலம் அமைதியை நிலைநாட்டுவோம். நமது ராணுவம் மோசமாக குறைந்து வருகிறது. எனவே, உலகிலேயே அதிநவீன ஆயுதங்களை உருவாக்க வேண்டும். நம் ராணுவத்தை மறுகட்டமைப்பு செய்ய திட்டமிட்டுள்ளேன்.

மேலும், உலகையே அச்சுறுத்தும் ஐஎஸ் தீவிரவாதிகளை கூண்டோடு அழிக்க திட்டம் தயார் செய்யுமாறு நம் ராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளேன். சிரியாவிலும் மற்ற நாடுகளிலும் பாதுகாப்பை உறுதி செய்தால், அகதிகள் அங்கேயே தங்கி பாதுகாப்பாக வாழ்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.