நீதிபதி கர்ணனுக்கு எதிராக நியாயமாக நடவடிக்கை: உச்சநீதிமன்றம்

Supreme Court, Supreme Court India, Supreme Court Cause List, Supreme Court Case Status By Name, Supreme Court Judgement, Supreme Court Display Board, Supreme Court Of India Judges, Supreme Court Recruitment, Supreme Court Of India Chief Justice

நீதிபதி கர்ணனுக்கு எதிராக நியாயமாக என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ, அதனையே எடுத்துள்ளோம் என்று உச்சநீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன், உச்சநீதிமன்ற நீதிபதிகளை கடுமையாக விமர்சித்த காரணத்தால், அவருக்கு 6 மாத சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரை கைது செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதற்காக, மேற்கு வங்க போலீசார் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளன.

நீதிபதி கர்ணன் தற்போது எங்கே இருக்கிறார் என்றே தெரியவில்லை. அவர், வங்கதேசம் அல்லது நேபாளத்திற்கு தப்பிச் சென்றுவிட்டார் எனக் கூறப்படுகிறது. இந்நிலையில், நீதிபதி கர்ணன் சார்பாக, அவரது வழக்கறிஞர் மன்னிப்பு கேட்டு, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இதன் மீதான விசாரணையின்போது, நீதிபதிகள் அமர்வு, கர்ணன் மீது என்ன நடவடிக்கை எடுக்க வேண்டுமோ, அதைப் பற்றி நன்கு, ஆலோசித்து, தீர்மானம் செய்து, அதனை நடைமுறைப்படுத்தியுள்ளதாகக் கூறியுள்ளது.