Kalvakuntla Chandrashekhar Rao, Chandrashekhar Rao, Chandrashekhar, Chandrashekhar CM, Tirumala

தெலுங்கானா மாநிலம் உதயமானால் திருப்பதி கோவில் ஏழுமலையானுக்கு ரூ.5 கோடியில் தங்க, வைர நகைகள் காணிக்கையாக செலுத்தப்படும் என்று வேண்டி கொண்டார்.

தெலுங்கானா மாநிலம் உதயமாகி முதல்-மந்திரியாக சந்திரசேகரராவ் பதவி ஏற்றவுடன் திருப்பதி ஏழுமலையானுக்கு காணிக்கை செலுத்தும் நகைகளுக்காக ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்தார்.

தொலைநோக்குப் பார்வையுடன் அமெரிக்கா செயல்பட வேண்டும்: மோடி

தங்க, வைர நகைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வந்தது. இப்பணிகள் முடிவடைந்ததால் நகைகளை காணிக்கை செலுத்த முதல்வர் சந்திரசேகரராவ் முடிவு செய்தார்.

நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்காக சந்திரசேகரராவ் நேற்று இரவு திருப்பதி வந்தார். அவருடன் குடும்பத்தினரும், மாநில மந்திரிகளும் வந்திருந்தனர்.

ஐஎஸ் தீவிரவாதிகள் 6 பேர் சென்னைக்குள் ஊடுருவல் – சு.சுவாமி

அவர்கள் திருமலையில் தேவஸ்தானத்துக்குச் சொந்தமான ஸ்ரீகிருஷ்ணா விடுதியில் தங்கினர். இன்று காலை 7.45 மணிக்கு சந்திரசேகரராவ் மற்றும் அமைச்சர்கள் விடுதியில் இருந்து புறப்பட்டு வராக சுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் ஏழுமலையான் கோவிலுக்கு சென்றனர். காலை 9 மணிக்கு அவர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

அப்போது சந்திரசேகர ராவ் ரூ.5½ கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை காணிக்கையாக வழங்கி, நேர்த்திக்கடனை நிறைவேற்றினார். தங்கம், வைர கற்கள் நிறைந்த நகைகள் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்ததாக தேவஸ்தான நிர்வாகிகள் தெரிவித்தனர்.

சந்திரசேகரராவ், திருமலைக்கு வருகையொட்டி ஐதராபாத்தில் இருந்து வந்திருந்த புலனாய்வுப்பிரிவு போலீஸ் ஐ.ஜி.நவீன்சந்த், ஐதராபாத் போலீஸ் ஐ.ஜி. எம்.கே.சிங் ஆகியோர் தலைமையிலான போலீஸ் அதிகாரிகள் திருமலைக்கு வந்து, திருப்பதி போலீசாருடன் இணைந்து விடுதி அறைகள் உள்பட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டனர்.