காஷ்மீர், அசாம் நிலவரம்: ராஜ்நாத் ஆலோசனை

Rajnath Singh, Rajnath Singh Address, Savitri Singh, Rajnath, Rajnath Singh Family Photo, Rajnath Singh Son, Pankaj Singh, Rajnath Singh Bjp, Rajnath Singh Pakistan, Breaking News, India Time News, Indiatimenews.Com, India News, World News

காஷ்மீர், அசாம் நிலவரம் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் டெல்லியில் பாதுகாப்பு அதிகாரிகளுடன் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலர் ராஜீப் மெஹ்ரிஷி, உளவு அமைப்புகளின் தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

காஷ்மீர், அசாமில் அமைதியை மீட்டெடுக்கும் முயற்சியில் பொதுமக்கள், வீரர்கள் உயிர்ச்சேதத்தை தவிர்க்குமாறு பாதுகாப்புப் படையினருக்கு ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார்.

காஷ்மீரின் ஊரி செக்டார் வாயிலாக நடைபெறவிருந்த ஊடுருவல் முயற்சி முறியடிப்பு குறித்து ராஜ்நாத் சிங்குக்கு எடுத்துரைக்கப்பட்டது.

அசாமில் கடந்த 5-ம் தேதி கோக்ரஜஹார் மாவட்டத்தில் நடந்த போடோ தீவிரவாதிகள் தாக்குதலில் 14 பேர் கொல்லப்பட்டனர். அதே போல் நேற்று (திங்கள்கிழமை) உல்பா தீவிரவாதிகள் 5 இடங்களில் குண்டு வெடிப்பை நிகழ்த்தினர். ஆனால், இதில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் இல்லை.

இருப்பினும் மாநிலத்தில் தொடர்ந்து அசம்பாவிதங்கள் நடைபெறுவதால் அசாம் பாதுகாப்பு நிலவரம் குறித்து இன்று ஆலோசிக்கப்பட்டது.