Kapil Mishra, Kapil Mishra Contact Details, Annapurna Mishra, Kapil Mishra Father, Rameshwar Prasad Mishra, Kapil Mishra Minister Delhi Govt, Satyendra Kumar Jain, Kapil Mishra Family, Kapil Mishra Facebook, Tamil News, Tamil Nadu News, Chennai News, India News, News In Tamil, Cinema News

டில்லி: டில்லி முதல்வர் கெஜ்ரிவால், கறுப்பு பணத்தை மாற்றி பண மோசடியில் ஈடுபட்டதாக அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா கூறியுள்ளார்.

கெஜ்ரிவால் கறுப்பு பணம் மாற்றியதற்கு என்னிடம் ஆதாரம் உள்ளது . அவர் பண மோசடியில் ஈடுபட்டார். அவருக்கு எதிராக சி.பி.ஐ., அணுகுவேன். மொகாலா கிளினிக் மோசடி யை வெளிப்படுத்துவேன். இது மிகப்பெரிய மோசடி திட்டம். இது பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

கெஜ்ரிவாலுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஆதாரம் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் கூறுகிறேன். தேர்தல் ஆணையத்திற்கு ஆம் ஆத்மி தவறான வங்கி விபரத்தை தெரிவித்தது. நன்கொடை விபரத்தையும் ஆம் ஆத்மி மறைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.