மரபணு கடுகுக்கு எதிராக கேரள சட்டப்சபை தீர்மானம்

Kerala Assembly, Kerala Legislative Assembly Election 2016, Kerala Legislative Assembly History, Kerala Legislative Assembly Election 2011 Results, Kerala Niyamasabha Ministers, Kerala Niyamasabha Questions 2016, Kerala Niyamasabha Live Today, Kerala Mla List 2016, Kerala Legislative Assembly Ministers
Kerala Assembly, Kerala MLA

மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு எதிராக கேரளா சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதைகளை விளைச்சலுக்கு பயன்படுத்தலாம் என்ற மரபணு பொறியியல் அனுமதிக் குழுவின் பரிந்துரையை சுற்றுச்சூழல் அமைச்சகம் ஏற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள விவசாயிகள், மத்திய அரசு தமது முடிவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

விவசாயிகளின் கோரிக்கையின் படி, கேரளா சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அப்போது பேசிய அம்மாநில வேளாண் துறை அமைச்சர் சுனில் குமார், மரபணு மாற்றப்பட்ட விதையை அனுமதிப்பது மிகவும் தீவிரமான ஒரு விசயம் என்றார். பாரம்பரிய விதைகளை அழித்தால், பன்னாடுகளிடம் விவசாயிகள் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.