டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம்: தீபா கர்மாகர்

Olympics, Olympics 2020, Olympics Locations, Olympics 2017, Olympics History, Olympics 2018, Olympics Schedule, Olympics 2016, Olympics 2012

ரியோ டி ஜெனிரோ: வரும் 2020ல் டோக்கியோ நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் நிச்சயம் பதக்கம் வெல்வேன் என ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மாகர் கூறியுள்ளார்.

பிரேசிலின் ரியோ நகரில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில், பெண்களுக்கான ஆர்டிஸ்டிக்ஸ் ஜிம்னாஸ்டிக்ஸ் வால்ட் பிரிவு பைனலில் இந்தியா சார்பில் தீபா கர்மாகர் விளையாடினார். ஜிம்னாஸ்டிக் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார். ஜிம்னாஸ்டிக் போட்டியில் தகுதி பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையை பெற்றார். இந்த போட்டியில் 4வது இடத்திற்கு வந்து பதக்க வாய்ப்பை நூலிலையில் தவறவிட்டார்.

இந்நிலையில், தீபா கர்மாகர் அளித்த பேட்டி ஒன்றில், இந்த ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வேன் என நான் எதிர்பார்க்கவில்லை. நான்காவது இடம் வந்தது பெருமையளிக்கிறது. குத்துச்சண்டை, மல்யுத்தத்தில் 4வது இடத்திற்கு வந்தால் வெண்கல பதக்கம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் எனக்கு அப்படி கிடையாது. பதக்க வாய்ப்பை நெருங்கி வந்தேன். அடுத்த நான்கு வருடத்திற்கு எனது இலக்கு தங்கம் என்பதாக இருக்கும். என்னை பொறுத்தவரை இது தான் எனது முதல் ஒலிம்பிக் போட்டி. இதனால் நான் ஏமாற்றமடையவில்லை.

டோக்கியோவில் இன்னும் சிறப்பான திறமையை வெளிப்படுத்துவேன். ரியோ ஒலிம்பிக்கில் எனது திறமை திருப்தியளிக்கிறது. இங்கு பெற்ற புள்ளிகளே எனது அதிகபட்ச புள்ளிகளாகும். ஆனால் பதக்கம் பெற்றவர்கள் என்னை விட திறமைசாலிகளாக இருந்தனர். இந்த நாள் எனக்கான நாளாக இருந்திருக்க வாய்ப்பில்லை என்றார்.