உத்தரபிரதேச சட்டசபைத் தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெற்று, முதல்-மந்திரியாக யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றுக் கொண்டார். பா.ஜனதா ஆட்சி அமைந்த பின்னர் இன்று சட்டசபை கூட்டம் தொடங்கியது. முதல் கூட்டு கூட்டத்தில் கவர்னர் ராம்நாயக் உரையாற்றினார்.
சட்டசபை நிகழ்ச்சிகள் தூர்தர்ஷன் மூலம் நேரடியாக ஒளிபரப்பும் செய்யப்பட்டது. எதிர்க்கட்சிகள் எம்.எல்.ஏ.க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். சட்டம்-ஒழுங்கு கெட்டுவிட்டதாக கூறி சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
அப்போது கவர்னர் ராம்நாயக்கின் மீது காகித பந்துகளும் வீசப்பட்டன. ஜிஎஸ்டி மசோதா ஏற்கனவே பாராளுமன்றத்தில் தாக்கல் ஆகிவிட்டது.