பழைய 500 ரூபாயில் மொபைல் ரீசார்ஜ்: மத்திய அரசு

பழைய 500, 1000 நோட்டுகளை வங்கிகளில் கொடுத்து புதிய நோட்டுகளாக மாற்ற அளிக்கப் பட்ட அவகாசம் நேற்று முன் தினம் முடிவுக்கு வந்தது.

பெட்ரோல் நிலையம் உள் ளிட்ட இடங்களிலும் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகள் பெறப்படாது என அறிவிக்கப் பட்டது. எனினும் கல்விக் கட்டணம், அரசுத் துறை சார்ந்த சிலவற்றுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அதில், மொபைல் போன் ரீசார்ஜ் கட்டணத்துக்கும் விதி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இதன்படி, பிரீபெய்டு மொபைல் ரீசார்ஜ் செய்வதற்கு பழைய 500 ரூபாய் தாள்களை, டிசம்பர் 15-ம் தேதி வரை பொதுமக்கள் பயன்படுத்தலாம். எனினும், பழைய 1000 ரூபாய் தாள்களைப் பயன்படுத்த அனுமதியில்லை.

இதுகுறித்து டெல்லியில் உள்ள செல்லுலார் ஆபரேட்டர் கள் சங்க தலைவர் ராஜன் மேத்யூஸ் கூறும்போது, ‘‘500, 1000 நோட்டுகள் தடை செய்யப்பட்ட பிறகு, பிரீபெய்டு மொபைல் சேவைகளின் ரீசார்ஜ் மற்றும் டாப்-அப் வர்த்தகம் 30 முதல் 50 சதவீதம் வரை சரிந்துவிட்டது. புதிய ரூபாய் தாள்கள் புழக்கத் துக்கு வரும் வரை, பழைய 500, 1000 ரூபாய் தாள்களை ரீசார்ஜ் கட்டணங்களுக்காக பெற அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தோம். இதனை மத்திய அரசு ஏற்றிருப்பதை வரவேற்கிறோம். அன்றாட தேவைகளுக்கு போதிய அளவில் பணப்புழக்கம் மக்கள் மத்தியில் உருவாகும் வரை, 500, 1000 ரூபாய் நோட்டுகளை பெற, தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கவேண்டும்’’ என்றார்.