மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மோடி மறந்துவிட்டார்

காய்கறிகள் மற்றும் பருப்பின் விலை கடந்த 2 ஆண்டுகளில் விண்ணை முட்டும் அளவு உயர்ந்து விட்டதாக மக்களவையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டினார்.

மக்களவையில் பேசிய அவர், காங்கிரஸ் ஆட்சியில் 6 ஆயிரம் கோடி ரூபாய் வரை விவசாயிகள் கடன்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், ஆனால் பாஜக ஆட்சியில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் கோடி ரூபாய் பெருநிறுவனங்களின் கடன்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

தேர்தல் பிரச்சாரத்தின் போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவேன் என்று பிரதமர் மோடி உறுதியளித்ததாகவும், ஆனால் கடந்த 2 ஆண்டுகளில் தக்காளி, உருளைகிழங்கு, பருப்பு ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலை பெருமளவு உயர்ந்து விட்டதாகவும் குற்றஞ்சாட்டினார்.

கடந்த சில நாட்களுக்கு முன் பாஜக அரசின் 2ம் ஆண்டு விழா கொண்டாட்டத்தின் போது இந்த விலைவாசி உயர்வு குறித்து எந்த அமைச்சரும் பேசுவதற்கு ஏன் முன்வரவில்லை என்று ராகுல் காந்தி கேள்வி எழுப்பினார்.