விஜய் மல்லையா மீது மேலும் ஒரு வழக்கு

Vijay Mallya, Vijay Mallya Loan, Vijay Mallya Car Collection, Vijay Mallya News, Laila Mallya, Vijay Mallya Net Worth, Siddharth Mallya, Vijay Mallya Son, Vijay Mallya Ferrari Story, Breaking News, India Time News, Indiatimenews.Com, India News, World News

புதுடில்லி: பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, வங்கிகளில் ரூ.6027 கோடி கடன் வாங்கிவிட்டு, வட்டியுடன் திருப்பி செலுத்தாமல் மார்ச் மாதம் 2-ந் தேதி இங்கிலாந்துக்கு தப்பி விட்டார். அவர் நாட்டுக்கு திரும்பி வந்து, தன் மீதுள்ள வழக்குகளை எதிர்கொள்ள மறுத்து வருகிறார்.

அவர் மீது சட்டவிரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் ஏற்கனவே ஒரு வழக்கு பதிவு செய்துள்ளது. இந்நிலையில் விஜய் மல்லையா மற்றும் அவரது கூட்டாளிகள் மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் 2-வது வழக்கை மத்திய அமலாக்கப்பிரிவு பதிவு செய்துள்ளது.

பாரத ஸ்டேட் வங்கி கொடுத்துள்ள புகாரின் பேரில் சி.பி.ஐ. பதிவு செய்துள்ள கிரிமினல் வழக்கில் கூறப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், இந்த வழக்கை பதிவுசெய்து மத்திய அமலாக்கப்பிரிவு இயக்குனரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.