தமிழகத்தில் புதிதாக அரசு சட்டக் கல்லூரிகள்: முதல்வர்

Edappadi K Palaniswami, Edapadi Palaniswami named new CM pick, Edappadi, Edappadi Palaniswami, tamil nadu news, tamil news, chennai news, ADMK, AIADMK

சென்னை: தமிழகத்தில் 2017-18 கல்வியாண்டு முதலே தருமபுரி, ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய இடங்களில் புதிதாக அரசு சட்டக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

தமிழக அரசு அறிக்கை:

”தமிழகத்தில் உயர் தரத்துடன் கூடிய சட்டக் கல்வியை அளித்திடும் வகையில், தெற்காசியாவிலேயே முதன் முதலாக சட்டக் கல்விக்கென தனியாக தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தை முதல்வராக இருந்த ஜெயலலிதா நிறுவினார்.

கட்சியில் இணைய ஒ.பி.ஸ் அணிக்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் கீழ் தற்போது 7 அரசு சட்டக் கல்லூரிகளும், ஒரு தனியார் சுயநிதி சட்டக் கல்லூரியும் இயங்கி வருகின்றன.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கத்தில் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்ட தமிழ்நாடு தேசிய சட்டப் பள்ளியை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்து, சட்டக் கல்வி பயில விரும்பும் மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றினார்.

தமிழகத்தில் படிப்படியாக போதிய எண்ணிகையிலான அரசு சட்டக் கல்லூரிகளை நிறுவுவதற்கு தமிழக அரசு தீர்மானித்துள்ளது.

அதன் அடிப்படையில், விழுப்புரம், தருமபுரி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் மற்றும் அதன் அருகாமையிலுள்ள பிற மாவட்டங்களைச் சேர்ந்த சட்டம் பயில விரும்பும் மாணவர்களுக்கு சட்டம் பயில அரசு சட்டக் கல்லூரி ஏதுவும் இல்லையென்பதால், இம்மாவட்டங்களைச் சேர்ந்த தகுதிவாய்ந்த மாணவர்கள் சட்டம் பயில்வதற்கு ஏதுவாக விழுப்புரம், தருமபுரி மற்றும் ராமநாதபுரத்தில் புதிதாக ஒரு அரசு சட்டக் கல்லூரி 2017-18ஆம் கல்வியாண்டு முதல் துவங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.