நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயர் மாற்றம்

நெய்வேலி: நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தின் பெயர், என்எல்சி இந்தியா லிமிடெட் என மாற்றப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலியில் அமைந்துள்ள பொதுத்துறை மின்நிறுவனமான என்எல்சி 60 ஆண்டுகாலமாக செயல்பட்டு வருகிறது. தேசிய, சர்வதேச அளவில் வளர்ந்து வரும் நிறுவனமாக உள்ள என்எல்சி தனது பெயரில் தேசத்தின் பெயரை இணைத்து சர்வதேச அளவில் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலைய துறைகளில் முத்திரையை பதிப்பதற்கு ஏதுவாக நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், என்எல்சி இந்தியா லிமிடெட் என ஆகஸ்ட் 1ம்தேதி முதல் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான முழு ஒப்புதலையும் என்எல்சி தலைவர் தலைமையிலான இயக்குநர்கள் குழு, மத்திய அரசிற்கு தெரிவித்து, அதற்கான அனுமதியையும் முறையாக பெற்றுள்ளது. இந்த புதிய பெயர் ஆகஸ்டு 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில் அலுவல் ரீதியாக மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்தது. நேற்று முதல் நிறுவனத்தின் பல்வேறு அலுவல் பதிவேடுகளில் புதிய பெயர் பயன்படுத்தப்பட்டது. விரைவில் நகரில் நிறுவனத்தின் அனைத்து பெயர் பலகைகளும் புதிய பெயருடன் அமைக்கப்படும் என உயர்அதிகாரிகள் தெரிவித்தனர்.