பன்னீர்செல்வம், OPS, Panneerselvam, Jallikattu, Modi

டெல்லி: முன்னாள்  முன்னாள் முதலமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் இரட்டை இலை சின்னத்தைப் பெறுவது தொடர்பாக பிரமாண பத்திரத்தை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிப்பதற்காக முன்னாள் அமைச்சர்கள் பாண்டியராஜன், கே.பி.முனுசாமி ஆகியோருடன் அவர் டெல்லி சென்றுள்ளார். பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த பின்னர், டெல்லி லோக் கல்யான் மார்க் பகுதியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு சென்ற ஓ.பன்னீர்செல்வம், அங்கு பிரதமர் மோடியை சந்தித்து பேசினார்.

பன்னீர்செல்வம் திடீர் டெல்லி பயணம்

இந்த சந்திப்பின் போது குடியரசுத்தலைவர் தேர்தலில் ஆதரவை தருவது, ஜெயலலிதா மரணம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை கோருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.